தொடர்புடைய செய்திகள்
- 28 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45
- மோடிக்கு ஆதரவு அளித்தால் கொலை செய்துவிடுவோம்: இஸ்ரோ முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல்
- வெற்றிகரமாக ஏவப்பட்டது ஜிசாட் 31: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!
- வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி44: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
- கும்பமேளாவில் பங்கேற்ற மக்களை போட்டோ பிடித்த இஸ்ரோ....வைரலாகும் புகைப்படங்கள்
சந்திராயன் செயற்கைக்கோள் தயாரா ? – நீண்ட இழுபறிக்குப் பிறகு தகவல் !
இந்தியா நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் செயற்கைக்கோளான சந்திராயன் 2 உருவாக்கி வருகிறது. அந்த செயற்கைக்கோள் எப்போது விண்ணில் ஏவப்படும் என்பது குறித்து இஸ்ரோ விளக்கமளித்துள்ளது.
இந்தியா சார்பில் முதன்முதலாக நிலவைப்பற்றி ஆராய அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் சந்திராயன் 1 ஆகும். கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் செலவில் 2008 ஆம் ஆண்டும் அந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. மிகக்குறைந்த செலவில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் என்ற பெருமையை சந்திராயன் 1 இந்தியாவிற்குப் பெற்று தந்தது.
இதையடுத்து நிலவில் இறங்கி ஆராய்ச்சிகள் செய்யும் சந்திராயன் 2 ராக்கெட் தயாரிப்புப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. ஆனால் சந்திராயன் 2 எப்போது விண்ணில் ஏவப்படும் என்பதில் நீண்ட இழுபறி இருந்தது. இதுகுறித்து இஸ்ரோ இப்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘சந்திரயான் - 2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) ஆகிய மூன்று தொகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்று தொகுதிகளுக்கான பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுவிட்டன. ஜூலை 9 முதல் 16 வரையிலான காலத்தில் சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்பட்டு செப்டம்பர் 6ஆம் தேதி நிலவைச் சென்றடையும்’ என் அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
