செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (06:58 IST)

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி44: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

இந்தியாவின் எல்லையை கண்காணிக்க உதவும் செயற்கைக்கோள்  மற்றும் தமிழக மாணவர்கள் தயாரித்த கலாம் செயற்கைக்கோள் ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களுடன் நேற்றிரவு 11.37 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து  ஏவப்பட்ட இந்த  ராக்கெட் வெற்ற்கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்திய ராணுவ பயன்பாட்டுக்கு உதவும் மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக்கோள் நாட்டின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக மாணவர்கள் தயாரித்த கலாம் செயற்கைக்கோள் பல்வேறு பயன்பாட்டிற்கு உதவும்

மேலும் இஸ்ரோ இதுவரை 45 பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. இருப்பினும் முதன்முறையாக செயற்கைகோள்களின் சுற்று வட்டப்பாதையை அதிகரிக்கும் விதமாக புதிய தொழில்நுட்பம் இந்த ராக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதும் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், 'சந்திரயான்-2 உள்பட 32 செயற்கைக்கோள்களை இந்த ஆண்டில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாக கூறினார்.