1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 6 பிப்ரவரி 2019 (07:30 IST)

வெற்றிகரமாக ஏவப்பட்டது ஜிசாட் 31: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

பிரான்ஸ் நாட்டின் கயானாவிலிருந்து ஜிசாட்-31 என்ற செயற்கைக்கோளை இன்று அதிகாலை இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. விண்ணில் பறந்த சில நிமிடங்களில் செயற்கைக்கோள் செயல்பட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

தகவல் தொடர்பு வசதிகளைப் அதிகரிக்கும் வகையில் செலுத்தப்பட்ட இந்த ஜிசாட் 31 என்ற
இந்தச் செயற்கைக்கோள் ஐரோப்பிய ராக்கெட்டான ஏரியன் 5 மூலம் ஏவப்பட்டது. இதன் எடை 2,535 கிலோ ஆகும். மேலும் இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.        

இந்த ஜிசாட் செயற்கைக்கோள் விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். டெலிவிஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றுக்கும் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.31 மணியளவில் இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதுவரை தகவல் தொடர்பில் பெரும் பங்கு வகித்து வந்த இன்சாட் -4ஏ மற்றும் இன்சாட் 4சி.ஆருக்கு மாற்றாக இந்த செயற்கைகோள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது