வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (13:27 IST)

கும்பமேளாவில் பங்கேற்ற மக்களை போட்டோ பிடித்த இஸ்ரோ....வைரலாகும் புகைப்படங்கள்

உத்தரபிரதேசத்தில் நடைபெறும் கும்பமேளாவை விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுத்து இஸ்ரோ வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
செவ்வாய் கிழமை அன்று தொடங்கிய இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் அகோரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். மார்ச் 4 ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழா வட மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
 
10 கோடிக்கும் மேற்பட்ட சாமியார்கள் இதில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகிறது.  தற்போது இந்த கும்பமேளாவ்பைப் பற்றிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இது இஸ்ரோ விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
இஸ்ரோவில் கார்டோசாட் 2 இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இப்புகைப்படங்கள் கறுப்ப்பு வெள்ளையில் இருக்கிறது.
 
பலகோடி மக்கள் மற்றும் அகோரிகள் கலந்து கொண்ட இவ்விழா இந்துக்களின் முக்கியமான் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
 
தற்போது இஸ்ரோ விண்வெளியில் எடுத்துள்ள இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.