வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 2 மே 2019 (09:01 IST)

நான் கேட்ட மூன்று கேள்விகள் – ஒட்டப்பிடாரத்தில் ஸ்டாலின் !

ஒட்டப்பிடாரத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமிக்கு 3 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளுக்கான அதிமுக, திமுக, நாம் தமிழர் மற்றும் அமமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டு. வேட்புமனுத்தாக்கலும் முடிந்துவிட்டது.

திமுகவுக்கு வேட்பாளர்களுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் மே 1 ஆம் தேதியன்று தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து நேற்று பேசிய அவர்’;நான் தமிழக முதல்வரிடம் மூன்று கேள்விகளைக் கேட்டேன். ஆனால் அ’வற்றிற்கு இன்னும் பதில் வரவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்தேன், ஆறுமுகசாமி ஆணையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது ஏன் எனக் கேட்டேன், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளிகள் மிரட்டியது ஏன் எனக் கேட்டேன்… ஆனால் இன்னும் பதில் வரவில்லை’ எனக் கூறினார்.