வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2023 (19:37 IST)

:முதல்வரின் தனி உதவியாளரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை!

kejriwal
டெல்லியில், முதல்வர் கெஜ்ரிவாலில் தனி உதவியாளர் பிபல் குமாரிடம் அமலாக்கத்துறையினர் இன்று விசாரணை நடத்தினர்.

டெல்லி யூனியனில் முதல்வர்  கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

கடந்தாண்டு,  மதுபானம் உரிமை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த புகாரின் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, அதன்பின்னர்  சம்மன் அனுப்பி விசாரணையும் நடத்தினர்.

இது நாடு முழுவதும் பரபரப்பான பேசப்பட்ட நிலையில், இன்று மதுபானம் உரிமை வழங்குவதில் முறைகேடு தொடர்பாக முதல்வர், கெஜ்ரிவாலில் தனி உதவியாளார் பிபில் குமாரை இன்று, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை  நடத்தினர்.

அவர் வாக்குமூலத்தை அடுத்து, பண மோசடி தடுப்பு சட்டப்படி அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள்'', மதுபானம் உரிமை வழங்குவதில் முறைகேடு தொடர்பான குற்றப்பத்திக்கையில், துணை முதல்வர் மணீஸ் சிசோடியா, பிபல்குமார் உள்ளிட்ட  36 பேர் மீது ரூ.1000 கோடி பண மோசடி தொடர்பான ஆதாரங்களை அழிக்க வேண்டி, 170 அலைப்பேசி அழைப்புகளைப் பயன்படுத்திய குற்றாச்சாட்டின்படி, தற்போது விசாரணை நடைபெறுகிறது'' என்று தெரிவித்துள்ளனர்.