1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (08:02 IST)

ஓலா, உபெர் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை.. டெல்லி அரசின் அதிரடி அறிவிப்பு..!

Bike Taxi
ஓலா, உபெர், ரேபிடோ ஆகிய நிறுவனங்களின் இருசக்கர டாக்ஸி சேவைகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இருசக்கர வாகன டாக்ஸி சேவைகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அனுமதி இல்லாமல் இருசக்கர வாகன டாக்ஸி சேவைகள் இயக்கப்படுவது சட்டப்படி குற்றம் என்று இதனால் உடனடியாக இந்த சேவையை நிறுத்த வேண்டும் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
 
இந்த உத்தரவை மீறினால் முதல் முறை ஐயாயிரம் இரண்டாவது முறை பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் இரு சக்கர வாகன சேவையுடன் கூடிய செயலிகள் இருந்தால் ஒரு லட்சம் அபதாரம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே கர்நாடக, மகாராஷ்டிரா மாநிலங்கள் இருசக்கர டாக்ஸி சேவைகளை தடை செய்துள்ள நிலையில் தற்போது டெல்லி அரசும் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva