செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (08:49 IST)

டெல்லி துணை முதல்வர் உடல்நிலை பின்னடைவு: தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்

டெல்லி துணை முதல்வர் உடல்நிலை பின்னடைவு
கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நிலை பின்னடைவு என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டெல்லி துணை முதல்வர்  மனீஷ் சிசோடியா செப்டம்பர் 14-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி லோக் நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு  மாற்றப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது
 
கொரோனா உடன் டெங்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளதாகவும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் மற்றும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததை அடுத்தே அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.