ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (14:46 IST)

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் - ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி

delhi mayor
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் - ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி
டெல்லி மாநகராட்சியின் மேயர் தேர்தல் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே ஒரு வழியாக நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
பத்து ஆண்டுகளுக்கு பின் டெல்லி மாநகராட்சிக்கு பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் 15 ஆண்டுகளாக டெல்லி மேயர் பதவி பாஜகவிடம் இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஆம் ஆத்மி வசம் சென்றுள்ளது.
 
மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட டெல்லி மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்த முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் டெல்லி மாநகராட்சி மேயராக ஷெல்லி தேர்வு செய்யப்பட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
Edited by Mahendran