1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2024 (13:51 IST)

IRCTC இணையதளம் மீண்டும் முடங்கியது.. ஒரே மாதத்தில் 3வது முறை.. பயணிகள் அவதி

irctc
இந்த மாதத்தில் மட்டும் ஐஆர்சிடிசி இணையதளம் இரண்டு முறை முடங்கிய நிலையில் இன்று மூன்றாவது முறையும் முடங்கி இருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டை ஒட்டி வெளியூர் செல்வதற்காக பலர் இன்று காலை 10 மணிக்கு தட்கல் முறையில் முன்பதிவு செய்ய முயன்ற போது ஐ ஆர் சி டி சி இணையதளம் மற்றும் மொபைல் செயலி ஆகிய இரண்டுமே முடங்கியதாக தெரிகிறது.

இதனால் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு சிரமத்திற்கு உள்ளாகிதாகவும் பல பயணிகள் இணையதளத்தில் உள்ளே நுழைய முடியவில்லை என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் உள்ளே நுழைந்தவர்கள் கூட டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இன்று காலை 10 மணிக்கு தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்ற போது தான் முடக்கம் ஏற்பட்டதாகவும் இது குறித்து பல பயனர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்த வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Mahendran