செல்லப்பிராணிகளுக்கு ரயிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு.. ஆனால் இது கட்டாயம்..!
மனிதர்கள் ரயிலில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் நிலையில், செல்ல பிராணிகளுக்கும் முன்பதிவு செய்யும் திட்டம் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட நிலையில், அதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
செல்ல பிராணிகளை ரயிலில் ஏசி முதல் வகுப்பு பெட்டிகளில் மட்டும் உடன் அழைத்துச் செல்வதற்கு சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை ரயில்வே நிர்வாகம் தற்போது தொடங்கி இருப்பது பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஆனால் அதே நேரத்தில் செல்ல பிராணிகளை ரயிலில் கொண்டு செல்வதற்கு, மூன்று மணி நேரத்திற்கு முன்பு ரயில் நிலையத்திற்கு அழைத்து வர வேண்டும் என்றும், அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்திய சான்றிதழ்களை ரயில்வே அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இந்த வசதியை இதுவரை 700 க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.