செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 நவம்பர் 2024 (08:28 IST)

அரசுப் பேருந்துகளில் பயணித்தால் இருசக்கர வாகனம், LED TV பரிசு! - போக்குவரத்துக் கழகம் கலக்கல் அறிவிப்பு!

TNSTC

தமிழகப் போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் வகையில் பரிசுத் திட்டம் ஒன்றை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

 

 

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) SETC பேருந்துகள் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் முதல் அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களான பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம் என பல வழித்தடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில் பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை TNSTC இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலமாக பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சிறப்பு குலுக்கல் பரிசுகள் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படும். அதன்படி முதல் பரிசாக இரண்டு சக்கர வாகனமும், இரண்டாவது பரிசாக LED TV, மூன்றாவது பரிசாக குளிர்சாதன பெட்டி ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K