வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2024 (10:02 IST)

இனி 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம்.. இன்று முதல் அமல்.. TNSTC தகவல்

தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தற்போது 60 நாட்களுக்கு முன்பு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும், இன்று மதியம் 12 மணி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில், பயணிகளின் நீண்ட காலத்திற்கு முன்பே பயண திட்டத்திற்கு ஏதுவாக தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என்பதனை 90 நாட்கள் என உயர்த்தி நவம்பர் 18 முதல் அமுல்படுத்தப்படுகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து சிரமம் இன்றி பயணம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் போக்குவரத்து கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva