திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (10:18 IST)

எதிர்பார்த்தது போலவே 10 நிமிடத்தில் விற்று தீர்ந்தன தீபாவளி ரயில் முன்பதிவு..!

Rail Ticket Reservation
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் இன்று முதல் ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்பார்த்தபடி தீபாவளி ரயில் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் 5 ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
 
பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லை விரைவு ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன என்றும், கன்னியாகுமரி, அனந்தபுரி, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் 2ம் வகுப்பு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
அதேபோல் வைகை, திருச்செந்தூர், குருவாயூர் விரைவு ரயில்களில் மட்டுமே 2ம் வகுப்பு படுக்கை டிக்கெட்டுகள் உள்ளன. அதுவும் இன்னும் சில நிமிடங்களில் தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது இந்த முன்பதிவில் இருந்து தெரிய வருகிறது.
 
Edited by Mahendran