தொடர்புடைய செய்திகள்
- காஷ்மீரில் பயங்கர குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு
- இதுதான் எனது கடைசி மெசேஜ்: காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் வீடியோ
- நிர்மலாதேவியை படம்பிடித்த பத்திரிகையாளர்கள் மீது போலீஸ் தாக்குதல்
- காஷ்மீரில் பயங்கர குண்டுவெடிப்பு: 27 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
- கிரிக்கெட் பயிற்சியாளர் மீது தாக்குதல்... கம்பீர் கண்டனம்
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி; இண்டர்நெட் சேவை திடீர் நிறுத்தம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜெயிஷ்-இ-முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் ஜெயிஷ்-இ-முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தாக்குதல் நடத்திய மனித வெடிகுண்டு தீவிரவாதி பேசியுள்ளான். இந்த வீடியோ காஷ்மீர் பகுதியில் அதிகளவில் வைரலானதை அடுத்து தெற்கு காஷ்மீரில் இண்டர்நெட் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீநகர் உள்பட முக்கிய பகுதிகளில் இணையதள வேகம், 2ஜியாக குறைக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கு இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் எல்லையில் குவிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் இருநாட்டின் எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளது.
