காஷ்மீரில் பயங்கர குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு
காஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் நேற்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் முதலில் 18 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் படுகாயம் அடைந்த பல வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பலி எண்ணிக்கை உயர்ந்து 44 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது. மேலும் காயமடைந்த வீரர்களில் ஒருசிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இவர்களின் மறைவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சரவை குழு கூட்டம் இன்று கூடுகிறது.
ஒழிந்திருந்து கேவலமான தாக்குதலை நடத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.