ஞாயிறு, 9 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (16:56 IST)

குற்றவாளிக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர்?. காவல் நிலையம் முற்றுகை.! தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

porattam
புதுச்சேரியில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் இன்ஸ்பெக்டரை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுநல அமைப்பினர் பெரியகடை காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்  பரபரப்பு நிலவியது.
 
புதுச்சேரியில் போலி ஆவணம் தயாரித்து காந்தி வீதியில் உள்ள முந்திரி பருப்பு கடையை அபகரிப்பு செய்யும் ஊழியர் கோகுல் என்பவரை கைது செய்ய வேண்டும், குற்றவாளிக்கு துணை போகும் பெரிய கடை ஆய்வாளர் ஜெய்சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரிய கடை காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக சமூக ஜனநாயக இயக்கங்கள் அறிவித்திருந்தன.
 
அதன்படி  இன்று, மிஷின் வீதி- நேரு வீதி சந்திப்பில் இருந்து  பேரணியாக வந்த போராட்டக்காரர்களை போலீசார்  தடுப்புகளை அமைத்து தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 
police fight
இதனையடுத்து தடுப்பு கட்டைகளை தூக்கி எறிந்து போராட்டக்காரர்கள் நேரு வீதியில் உள்ள காவல் நிலையம் நோக்கி ஓடினர். அவர்களுடன் போலீசாரும்  ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 
காவல் நிலையம் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து கோஷங்கள் எழுப்பிய சமூக ஜனநாயக இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.