1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (10:29 IST)

தென்னிந்தியா தனிநாடு என கூறிய காங்கிரஸ் எம்பி வீடு முற்றுகை.. பெங்களூரில் பதட்டம்..!

தென்னிந்திய மாநிலங்களை ஒன்றிணைத்து தனிநாடு உருவாக்க வேண்டிய நிலை வரும் என கூறிய காங்கிரஸ் எம்பி வீட்டை பாஜகவினர் முற்றுகையிட்டதால் பெங்களூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தென்னிந்திய மாநிலங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என கூறிய கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் சகோதரர் டிகே சுரேஷ் தென்னிந்திய மாநிலங்களவை ஒன்றிணைத்து தனிநாடு கோரும் நிலை உருவாகி இருப்பதாக தெரிவித்தார்.

அவரது கருத்துக்கு டி.கே.  சிவக்குமார்   உட்பட காங்கிரஸ் கட்சியினரே கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது பாஜகவினர், காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் வீட்டை முற்றுகையிட்டதால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து டிகே சுரேஷ் எம்பி வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது வீட்டை முற்றுகையிட வந்த பாஜகவினரை போலீசார் அடுத்து நிறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Edited by Mahendran