வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (16:40 IST)

எல்.முருகனை விமர்சிப்பதா.? டி.ஆர்.பாலு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.! அண்ணாமலை..!!

annamalai
மத்திய அமைச்சர் எல்.முருகனை பற்றி தவறாக பேசிய திமுக எம்.பி டி.ஆர் பாலு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
 
மக்களவையில் பேசிய டி ஆர் பாலு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தேவையான உதவிகள் செய்ய முன்வரவில்லை என குற்றம் சாட்டினார்.  அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டு பேச முயன்றார். உடனே, நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள். தயவு செய்து உட்காருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும். நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்றும் நீங்கள் அமைச்சராகவும் இருக்க தகுதியற்றவர் என்றும் எல்.முருகனை நோக்கி டி.ஆர்.பாலு ஆவேசமாக பேசினார்.

tr ballu
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நான் அமைச்சராக இருப்பதை திமுகவால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் டி ஆர் பாலுவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.  சாதாரண குடும்பத்தில் இருந்து மத்திய அமைச்சரான எல் முருகனை விமர்சிப்பதா என கண்டனம் தெரிவித்துள்ள அவர், அரசியலில் யார் அன்ஃபிட் என டி ஆர் பாலுவால் கூற முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.


மேலும் டி.ஆர் பாலு தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.