செவ்வாய், 16 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 டிசம்பர் 2025 (12:05 IST)

ஏண்டா இந்தியா வந்தோம்.. நொந்து நூலான மெஸ்ஸி.. மோசமான நிகழ்ச்சி ஏற்பட்டால் அதிருப்தி..!

ஏண்டா இந்தியா வந்தோம்.. நொந்து நூலான மெஸ்ஸி.. மோசமான நிகழ்ச்சி ஏற்பட்டால் அதிருப்தி..!
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை வரவேற்ற கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் டிசம்பர் 13 அன்று ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 
 
அர்ஜென்டின நட்சத்திர வீரரை பார்க்க அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள், மெஸ்ஸி வெறும் 20 முதல் 25 நிமிடங்கள் மட்டுமே மைதானத்தில் இருந்ததால் ஏமாற்றமடைந்தனர்.
 
மெஸ்ஸி மைதானத்திற்குள் வந்தபோது, அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரை சூழ்ந்தனர். ரசிகர்களால் மெஸ்ஸியை சரியாகப் பார்க்க முடியாததால், நிலைமை வன்முறையாக மாறியது. இதனால், மெஸ்ஸி உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
 
முன்னாள் இந்திய மிட்பீல்டர் லால்கமல் பௌமிக், ஆரம்பத்தில் மெஸ்ஸி மகிழ்ச்சியாக இருந்தாலும், அதிகமான மக்கள் களத்திற்குள் நுழைந்து புகைப்படம் எடுக்க தொடங்கியபோது அவர் எரிச்சலடைந்து நிதானத்தை இழந்ததாக தெரிவித்தார். 
 
மோசமான நிர்வாகம் காரணமாக மெஸ்ஸியின் பாதுகாப்பு குழு மற்றும் அவரது நண்பர்களான லூயிஸ் சுவாரஸ், ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் அதிருப்தி அடைந்தனர். இந்த குழப்பமே நிகழ்வு பாதியிலேயே நிறுத்தப்பட காரணம் என்று பௌமிக் விளக்கினார்.
 
Edited by Siva