1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (10:36 IST)

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காவல் நிலையம், மலிவு விலை உணவகம்: அமைச்சர் சேகர்பாபு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளதாகவும் விரைவில் மலிவு விலை உணவகம் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம்  புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கிருந்து தான் கிளம்புகின்றன.

இந்த நிலையில் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் வசதி செய்து கொடுக்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு தற்போது பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையத்திற்கு அடிக்கல்  நாட்டப்பட்டு உள்ளது. 
 
மேலும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிகளை முன்னிட்டு விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மேலும் கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 கடை உரிமையாளர்களுக்கு கிளாம்பாக்கத்தில் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Edited by Mahendran