புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 அக்டோபர் 2023 (08:35 IST)

கேம்பஸ் இன்டர்வியூ.. இன்ஃபோசிஸ் வெளியிட்ட அறிவிப்பால் கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி..!

Infosys
இன்ஃபோசிஸ் இந்த வருடம் கேம்பஸ் இன்டர்வியூ செல்லாது என அறிவித்துள்ளதால் கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
இந்த ஆண்டு புதியவர்களை வேலைக்கு அமர்த்த இன்ஃபோசிஸ் கல்லூரி வளாகங்களுக்குச் செல்லாது எனவும், அமெரிக்கா உள்ளிட்ட உலக ஐடி சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இன்ஃபோசிஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
 ஒவ்வொரு ஆண்டும் இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள  புகழ்பெற்ற கல்லூரிகளுக்கு சென்று கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும். அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பின் வேலை வழங்கப்படும் 
 
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைத்து வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது.
 
இதனால் இந்த ஆண்டு புதிய நபர்களை வேலைக்கு எடுக்கப் போவதில்லை என்றும் அதனால் இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொள்ள போவதில்லை என்றும்  இன்போசிஸ் தெரிவித்துள்ளதால் கல்லூர் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva