இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மாமனார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி வாழ்த்து!
இங்கிலாந்து பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அவர்களுக்கு அவரது மாமனாரும் இந்திய தொழிலதிபருமான இன்போசிஸ் நாராயணமூர்த்தி வாழ்த்து கூறியுள்ளார்
இங்கிலாந்து பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ் என்பவர் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்
இதனையடுத்து அவருக்கு உலகெங்கிலுமிருந்து தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரிஷி சுனக்கின் மாமனாரும் இந்திய தொழிலதிபருமான இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தனது மருமகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
அவர் தனது டுவிட்டரில் ரிஷி சுனக்கால் நாங்கள் பெருமை பெருமிதம் கொள்கிறோம். இங்கிலாந்து மக்களுக்கு அவர் தன்னாலான நல்ல விஷயங்களை செய்வார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக்கிற்கு எனது வாழ்த்துக்கள் என அவர் கூறியுள்ளார்
Edited by Mahendran