1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India’s Demography Shift: Fertility Rate Drops Below Replacement Level

முதல்முறையாக இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைவு.. இப்படியே போனால் இளைஞர்கள் எண்ணிக்கை குறையும் என எச்சரிக்கை...!

இந்தியா
இந்திய வரலாற்றில் முதல்முறையாக, நாட்டின் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில்  இந்தியாவின் மொத்த பிறப்பு விகிதம் 2.3 என்ற அளவில் இருந்து 1.9 ஆக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
 
குறிப்பாக, இந்தியாவின் தலைநகரான டெல்லியின் பிறப்பு விகிதம் தற்போது 1.2 ஆக குறைந்துள்ளது, இது ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிறப்பு விகிதத்தை விடவும் குறைவானதாகும். இந்தியாவின் பிற மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்றவையும் நார்வே போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இணையான குறைந்த பிறப்பு விகிதப் பாதையிலேயே பயணித்து கொண்டிருக்கின்றன.
 
மறுபுறம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற வட மாநிலங்கள் மட்டுமே தற்போதும் ஒப்பீட்டளவில் சற்றே அதிக பிறப்பு விகிதத்தை கொண்டுள்ளன. கல்வி அறிவு, பொருளாதார வளர்ச்சி மற்றும் நகர்மயமாதல் போன்ற காரணங்களால் இந்தியர்களின் குடும்ப கட்டமைப்பு மாறி வருவதை இந்த தரவுகள் காட்டுகின்றன. 
 
இந்த தொடர் வீழ்ச்சியானது, எதிர்காலத்தில் இந்தியாவின் உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையை குறைத்து, முதியவர்களின் மக்கள் தொகையை அதிகரிக்கும் சவாலை ஏற்படுத்தக்கூடும் என சமூகவியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நன்றி அறிவிப்பு கூட்டம் எல்லாம் கிடையாது.. அதுக்கு பதிலா ரத்த தான முகாம்.. இதுதான் தவெக ஆட்சி...