1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Indias first female wing commander died

இந்தியாவின் முதல் விமானப் படை பெண் கமாண்டர் உயிரிழப்பு!

கொரோனா
இந்திய விமானப்படையின் முதல் விங் கமாண்டராக பணியாற்றிய விஜயலட்சுமி ரமணன் உயிரிழந்துள்ளார்.

1924-ம் ஆண்டும் பெங்களூருவில் பிறந்து எம்.பி.பி.எஸ். முடித்த விஜயலட்சுமி ரமணன் ராணுவத்தின் மருத்துவர்கள் பிரிவில் 1955-ம் ஆண்டு மருத்துவராக சேர்ந்தார். காயமடையும் ராணுவ வீரர்களுக்கான சிகிச்சைகளை அளித்த அவர் மகப்பேறு மருத்துவராகவும் பணியாற்றியவர்.

1972-ல் முதல் பெண்  விங் கமாண்டராக பதவி உயர்வு பெற்ற அவர் 1979-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர் தனது 96 ஆவது வயதில் முதுமைக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
அஞ்சு லட்சம் பரிசா.. லாட்டரி சீட்டை கிழிச்சு போட்டுட்டேனே! – கவுண்டமணி காமெடியான ஆட்டோ டிரைவர் வாழ்க்கை!