வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (08:51 IST)

அமேசான் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும்! இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!

இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரவீன் கண்டேல்வால் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

அமேசான் பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த ஆன்லைன் விற்பனை சந்தனையை கைவசம் வைத்துள்ளது. அவர்களிடம் வாங்கும் பொருட்கள் விலைக் குறைவாக இருப்பதாகவும் அதனால் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் அவர்களிடம் செல்வதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மற்ற நிறுவனங்களால் கொடுக்க முடியாத அளவுக்கு விலையைக் குறைத்து கொடுத்து சந்தையில் சீர்குலைவை இந்நிறுவனங்கள் ஏற்படுத்துவதால் அவற்றின் வணிக நடைமுறைகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அந்நிறுவனங்கள் அன்னிய முதலீட்டு விதிகளை மீறுகின்றனவா எனவும் ஆராய வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளன.