வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (11:02 IST)

மேக் இன் இந்தியாவில் இணையும் அமேசான்! – இந்தியாவில் மின்னணு பொருட்கள் தயாரிப்பு!

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அமேசான் உள்நாட்டு தயாரிப்புகளை செய்யப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் பொருட்கள் விற்பனையில் முதன்மையானதாக இருந்து வருகிறது அமேசான் நிறுவனம். அமெரிக்க நிறுவனமான அமேசான் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தங்கள் சந்தையை விரிவுப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறது. மேலும் மற்ற பிராண்ட் பொருட்களை விற்பது போலவே அமேசான் தனது பிராண்டில் சொந்தமாக பொருட்களை தயாரிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மின்னணு பொருட்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்க அமேசான் முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான தொழிற்பேட்டையை சென்னையில் துவங்க அமேசான் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.