1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஜூன் 2020 (13:36 IST)

அத்துமீறி வந்தால் தக்க பதிலடி குடுங்க! – தயார் நிலையில் இந்திய ராணுவம்!

இந்திய எல்லைப்பகுதிக்கு சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்க்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன – இந்திய ராணுவத்திடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 34 வீரர்களும் உயிரிழந்தனர். இதனால் சீனா- இந்தியா இடையே பெரும் பதற்றம் எழுந்துள்ளது, சீன பொருட்களை புறக்கணிக்க கோரி இந்தியாவின் பல பகுதிகளிலும் குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் முப்படைகளும் பதிலடி கொடுக்க தயாராவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு இந்திய ராணுவத்தை எல்லைப்பகுதியில் சீன படைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன படைகள் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.