செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 25 மே 2020 (11:17 IST)

கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி –இந்தியா முக்கிய பங்காற்றும்! பிரான்ஸ் தூதர் நம்பிக்கை!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அதில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என பிரான்ஸ் தூதா் இமானுவல் லெனைன் கூறியுள்ளார்.

கொரோனாவால் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் அனைத்து நாடுகளும் இப்போது தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அதன் காப்புரிமை எந்தவொரு நாட்டின் கைகளுக்கும் சென்றுவிடாமல், அனைத்து நாடுகளுக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் தூதா் இமானுவல் லெனைன் நேற்று பேசியபோது ‘கரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படுவதிலும், அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தடுப்பு மருந்து உலக அளவில் சமமான முறையில் விநியோகிப்பதிலும் அனைத்து நாடுகளும் ஒற்றுமை காட்டவேண்டும். தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்காற்றும். அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதியை இந்தியா அனுமதித்ததற்கு, பிரான்ஸ் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.