1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona virus crisis india wide

ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கு அதிகமான பாதிப்புகள்! - 4 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

India
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்ட ஊரடங்கும் முடிவடைந்து நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,021 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 57,721 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,635 பேர் பலியான நிலையில் 14,600 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 16,277 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 14,056 பேரும், டெல்லியில் 13,418 பேரும், ராஜஸ்தானில் 7,028 பேரும், மத்திய பிரதேசத்தில் 6,665 பேரும், உத்தர பிரதேசத்தில் 6,268 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அன்றாட உணவில் தயிர் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்...!!