1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 மே 2020 (16:21 IST)

கொரோனா தடுப்பு மருந்து வெற்றி! – சீனா அறிவிப்பு!

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் சீனா மருந்து சோதனையில் வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ள கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் ஊரடங்கு பல நாடுகளில் அமலில் உள்ளதால் பொருளாதாரமும் சரிவை சந்தித்துள்ளது. உலக நாடுகள் பல கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டறிய தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. Ad5 – nCov என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை சீனாவில் உள்ள 108 தன்னார்வலர்களுக்கு பரிசோதித்ததில் அது வெற்றியடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது, இந்த மருந்து சார்ஸ் வைரஸுக்கும் மருந்தாக பயன்படக்கூடியது என கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 501 பேருக்கு இந்த மருந்தை பரிசோதிக்க இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த கண்டுபிடிப்பு கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னேற்றத்தை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.