திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 1 ஜனவரி 2023 (16:49 IST)

புத்தாண்டை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் கைதிகள் பரிமாற்றம்!

India Pakistan
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய நாட்களில் தங்கள் நாடுகளில் பிடிபட்ட மற்ற நாட்டின் கைதிகளை பரிமாற்றம் செய்யப்படும் வழக்கத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் கடைபிடித்து வருகின்றன. 
 
ந்த நடைமுறை படி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள தண்டனை காலம் முடிந்த மீனவர்கள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றனர். பாகிஸ்தானில் உள்ள 30 இந்திய மீனவர்கள் மற்றும் 22 கைதிகளை விடுவிப்பது குறித்து தூதரக அளவில் தகவல் அளிக்கும்படி கேட்கப்பட்டது 
 
அதே போல் இந்தியாவில் உள்ள 71 பாகிஸ்தான் கைதிகளின் தகவல்களும் பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கி உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து இன்று கைதிகள் பரிமாற்றம் நடைபெறும் ன்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva