திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 1 ஜனவரி 2023 (14:20 IST)

தவறான இந்திய வரைபடம்.. மன்னிப்பு கேட்டது வாட்ஸ் அப் நிர்வாகம்!

Whatsapp
வாட்ஸ்அப் வெளியிட்ட இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் பகுதி இல்லாமல் இருந்ததை அடுத்து மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வாட்ஸ்அப் நிர்வாகம் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது.
 
புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதி மட்டுமே இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
 
இதனையடுத்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் இந்திய வரைபடத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வாட்ஸ்அப் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். 
 
இந்த நிலையில் வாட்ஸ்அப் நிர்வாகம் அந்த வீடியோவை நீக்கியுள்ளது. மேலும் இந்திய வரைபடத்தை தவறாக பதிவு செய்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva