1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India omicron cases and discharges

358 பேருக்கு கொரோனா; அதிகரிக்கும் குணமடைந்தோர்! – வேகமாக மீளும் இந்தியா!

India
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 300ஐ தாண்டியுள்ள நிலையில் குணமடையும் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் திரிபடைந்த கொரோனா வைரஸான் ஒமிக்ரானின் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்பதால் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளன. அதேசமயம் ஆய்வாளர்கள் பலர் ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என்றாலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பதிவானது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 358 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இதில் குணமானவர்கள் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. இதனால் விரைவில் பலரும் குணமடைந்து பாதிப்பு எண்ணிக்கை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
திமுக வைக் கண்டித்து நியாயத்தின் பக்கம் நிற்கும் திருமாவளவனுக்கு நன்றி… சீமான்!