புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 24 டிசம்பர் 2021 (07:16 IST)

தேர்தலை ஒத்திவையுங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தேர்தலை ஒத்தி வையுங்கள் என நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது என்பதும் கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் உத்தரப் பிரதேசம் கோவா பஞ்சாப் உள்பட ஒருசில மாநிலங்களில் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதாகவும் அந்த தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்றில் கருத்து கூறிய அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒமிக்ரான் மூன்றாவது அலை வராமல் தடுப்பதற்கு சட்டமன்ற தேர்தலை ஓரிரு மாதங்கள் தள்ளி வைக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
 
இந்த அறிவுறுத்தலை அடுத்து உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் சில மாதங்கள் ஒத்திப் போட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது