1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 ஜூன் 2018 (18:33 IST)

பெண்கள் வாழ ஆபத்தான நாடு; ஆய்வுக்கு இந்திய அமைச்சகம் கண்டனம்

பெண்கள் வாழ ஆபத்தான நாடு பட்டியலில் இந்தியா முதலிடம் என்ற ஆய்வுக்கு இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கண்டனம் தெரிவித்து உள்ளது. 

 
கடந்த வருடம் ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ ‘மீ டூ’ என்ற தலைப்பில் ஒரு ஹேஸ்டேக்கை தொடங்கினார். அந்த ஹேஸ்டேக்கில் பிரபலங்கள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள், வன்கொடுமைகள் குறித்து பதிவு செய்து வந்தனர்.
 
இந்த  ஹேஸ்டேக் மூலம் வெளிவந்த பதிவுகளை வைத்து இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் ராய்ட்டர்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உலகில் உள்ள 193 நாடுகளில் பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. அந்த கருத்து கணிப்பில் உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத 10 நாடுகளின் பெயர்கள் நேற்று வெளியானது. அதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
 
இந்நிலையில் இந்த ஆய்வுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கண்டனம் தெரிவித்து உள்ளது. பெண்களுக்கு மிகவும் அபாயகரமான நாடு என்று இந்தியாவைக் கருத்தில் கொண்டு கருத்துக் கணிப்பு எடுத்தது தேசத்தை தவறாக சித்தரிப்பதற்கான  ஒரு முயற்சியாகும் என்று அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.