திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 ஜூன் 2018 (12:38 IST)

கச்சா எண்ணெய்க்கு தடை: உயருமா பெட்ரோல் டீசல் விலை? சிக்கலில் இந்தியா!

கச்சா எண்ணேய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இராக், சவுதி அரேபியாவை அடுத்து இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் ஈரானில் இருந்து பெறப்படுகிறது. 
 
இந்நிலையில், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ள அமெரிக்கா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள் வாங்குவது தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 
 
அந்த வகையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுமையாக நிறுத்தி கொள்ள வேண்டும், இல்லையெனில் தடைகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளது.
 
ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், மேலும், இது போன்ற தடைகளால் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்றம் இருக்கக்கூடும் என தெரிகிறது. 
 
ஆனால், இந்த சிக்கலுக்கு தீர்வு காண வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் விரைவில் அமெரிக்கா செல்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.