1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India had world largest Nuclear plant

இந்தியாவில் உலகின் பெரிய அணுமின் நிலையம்! – பிரான்ஸ் நிறுவனம் தகவல்!

India
உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம் இந்தியாவில் அமைய உள்ளதாக பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் ஜைதாபூரில் கட்ட முன்னதாக பிரான்ஸ் நிறுவனமான இடிஎஃப் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிற்கு 10 கிகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்றும், இதன்மூலம் 7 கோடி வீடுகளுக்கான மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டது.

எனினும் ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்தை தொடர்ந்து இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த திட்டத்தை தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக இடிஎஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இரும்பு ஆலைகள் உற்பத்தி நிறுத்தம்! – ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு பஞ்சாப் தீர்வு!