1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (09:46 IST)

இரும்பு ஆலைகள் உற்பத்தி நிறுத்தம்! – ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு பஞ்சாப் தீர்வு!

இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்ஸிஜன் தேவைக்காக இரும்பு நிறுவனங்களின் உற்பத்தியை நிறுத்தி பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் இரும்பு மற்றும் ஸ்டீல் நிறுவனங்களில் பொருள் உற்பத்திக்கும் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எழுந்துள்ளதை கருத்தில் கொண்டு பஞ்சாபில் இரும்பு ஆலைகள் உற்பத்தியை நிறுத்த அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் இரும்பு ஆலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன்களும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.