தொடர்புடைய செய்திகள்
- தப்பு செஞ்சா நேரடி ஆக்ஷன்; ட்விட்டர் இனி சோசியல் மீடியா இல்ல!? – அரசு வட்டாரங்கள் தகவல்!
- 62 ஆயிரமாக உள்ள கொரோனா தினசரி பாதிப்புகள் – இந்திய நிலவரம்
- நோவாவாக்ஸ் தடுப்பூசி சோதனைகள் ஆல்மோஸ்ட் டன்... மத்திய அரசு அப்டேட்!
- முடிவுக்கு வரும் கொரோனா 2வது அலை... தொற்றிக்கொள்ளும் 3வது அலை அச்சம்!
- 17.73 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
கருப்பு, மஞ்சள் பூஞ்சைகளை தொடர்ந்து பச்சை பூஞ்சை! - பீதியில் மக்கள்
இந்தியாவில் கரும்பூஞ்சை தொற்றை தொடர்ந்து தற்போது பச்சை பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது கரும்பூஞ்சை தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நாடு முழுவதும் பலர் கரும்பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மருந்துகள், படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றை தொடர்ந்து, வெள்ளை மற்றும் மஞ்சல் பூஞ்சை தொற்றுகளும் ஒரு சிலருக்கு கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது பச்சை பூஞ்சை தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 34 வயது நபருக்கு பச்சை பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் மும்பை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பச்சை பூஞ்சை தொற்று பதிவாவது இதுவே முதல்முறை என்பதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
