1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India Corona cases overcross 5 thousand

5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா! – பலி எண்ணிக்கையும் அதிகரிப்பு!

India
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளும், பலியும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,789 ஆக இருந்த நிலையில் தற்போது 5,194 ஆக உயர்ந்துள்ளது. 124 ஆக இருந்த பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக குணமானவர்கள் எண்ணிக்கை 353 லிருந்து 402 ஆக உயர்ந்துள்ளது.

ஊரடங்கு காலம் ஏப்ரல் 14ல் முடிவதாக உள்ள நிலையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மருந்துகளின் நச்சு தன்மையை போக்கும் அருகம்புல் சாறு...!!