1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (09:44 IST)

ஏழைகளுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கல! – மத்திய அரசு குறித்து ப.சிதம்பரம்

கொரோனா நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவை எதுவும் ஏழைகளுக்கு போய் சேரவில்லை என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பொருளாதார ரீதியாக மக்களுக்கு உதவ மத்திய அரசு நிவாரண கால அவசர திட்டங்கள் சிலவற்றை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் “இன்னும் நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் மக்கள் பலருக்கு மத்திய அரசிடமிருந்து ஒரு ரூபாய் கூட அளிக்கப்படவில்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை அரசு துரிதப்படுத்தி ஏழை மக்களுக்கு உடனடியாக உதவ வேண்டும்” என கூறியுள்ளார்.

சமீபத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து பேசியது வரவேற்கதக்கது என குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம் நாட்டில் ஊரடங்கால் 23 சதவீதம் வேலையிழப்பு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.