1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (21:45 IST)

இரவு விருந்து முடிந்தது: சீன அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

தமிழகத்திற்கு வருகை தந்துள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன்று மாலை சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி கிளம்பி அங்கு உள்ள வரலாற்றுச் சின்னங்களை பார்வையிட்டார். பின்னர் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீன அதிபர் அதன் பின்னர் பிரதமர் மோடியுடன் இரவு விருந்து சாப்பிட்டார் 
 
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளுடன் கூடிய இந்த விருந்தை சீன அதிபர் ரசித்து சாப்பிட்டதாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து இரவு விருந்து முடிந்ததும் இரு தலைவர்களும் தனியாக தற்போது ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த ஆலோசனையில் இரு நாட்டு எல்லைப் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டு வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவும் வலுப்படும் என்று கூறப்படுகிறது 
 
இந்திய சீன எல்லையில் அவ்வப்போது பதட்டம் ஏற்பட்டு வரும் நிலையில் இரு தலைவர்களின் இந்த பேச்சுவார்த்தை, அதற்கு ஒரு முடிவு கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இரு தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து இன்று இரவு அல்லது நாளை காலை செய்தியாளர்களிடம் உரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மேலும் இருவரும் என்ன பேசினார்கள் என்பதை அறிய உலக மீடியாக்கள் மகாபலிபுரத்தில் முற்றுகை இட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீடியாக்களுக்கு இன்றும் நாளையும் பரபரப்பான முக்கிய செய்திகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது