திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (20:03 IST)

சீன அதிபர் வருகையால் பிடிபட்ட 40 குரங்குகளும் 35 நாய்களும்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்கள் சென்னை மற்றும் மாமல்லபுரத்திற்கு இன்று வருகை வருகை தந்துள்ளார். சீன அதிபரின் வரலாற்று சிறப்புமிக்க வருகை தமிழகத்தையும் உலக அளவில் வெளிப்படுத்தும் ஒரு விஷயமாக கருதப்படுகிறது
 
பொதுவாக வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தால் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்கவே விரும்புவார்கள். தென்னிந்தியாவை உலக தலைவர்கள் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் சீன அதிபரின் வருகைக்கு பின் எந்த நாட்டின் தலைவர்கள் இந்தியா வந்தாலும், இனி மாமல்லபுரத்திற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அதேபோல் இன்றும் நாளையும் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும்  நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலக மீடியாக்கள் இரு தலைவர்கள் நடத்தும் பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் குறித்து அறிய ஆவலுடன் உள்ளனர்.
 
இந்த நிலையில் சீன அதிபரின் வருகையை ஒட்டி பொதுமக்கள் மட்டுமின்றி ஒருசில விலங்குகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மகாபலிபுரத்தில் அதிகமான அளவில் குரங்குகள் நடமாடும் என்பதும் அவை சுற்றுலா பயணிகளுக்கு பெருந்தொல்லையாக இருந்து வந்தது தெரிந்ததே
 
அந்த வகையில் சீன அதிபரின் வருகையியின்போது குரங்குகளின் சேட்டை இருக்கக் கூடாது என்பதற்காக சுமார் 40 குரங்குகளை பாதுகாப்பு படையினர் பிடித்து வண்டலூர் விலங்குகள் பூங்காவில் ஒப்படைத்துள்ளனர். அதேபோல் 35 நாய்களும் பிடிபட்டதாக தெரிகிறது. இனி மாமல்லபுரம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு குரங்குகள் மற்றும் நாய்கள் தொல்லை இருக்காது என்றே கருதப்படுகிறது