1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (16:57 IST)

பிரபல தொழிற்சாலையில் வருமான வரி சோதனை.! வரி ஏய்ப்பு புகாரில் அதிரடி நடவடிக்கை..!!

raid
புதுச்சேரியில் பிரபல தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவனத்திற்கு சொந்தமான 8-க்கும் மேற்பட்ட இடங்களில் 25க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
புதுச்சேரியில் பிரபல தொழிலதிபர் திலீப் கபூருக்கு சொந்தமான தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒதியம்பட்டில் உள்ளது. இதை தலைமையிடமாக கொண்டு புதுச்சேரி நகரப்பகுதிகள் மற்றும் அனைத்து விமான நிலையங்களிலும் கைபை, காலனி, ஷூ, பெல்ட், பர்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில் இன்று காலை ஒதியம்பட்டு மற்றும் அரியாங்குப்பத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் புதுச்சேரி நகரில் மிஷன் வீதியில் நான்கு கடைகள், கடற்கரையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்ட இடங்களில்  25க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
மேலும் வருமான வரித்துறைக்கு உரிய வருமானத்தை காட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து இந்த தீவிர சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.