திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (18:15 IST)

19 வயது இளம்பெண்ணை 16 நாட்கள் கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்த நபர்

டெல்லியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை  16 நாட்கள் கட்டிப்போட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட நபரை  போலீஸார் தேடி வருகின்றனர்.

டெல்லியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை காணவில்லை என்று அப்பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காணாமல் போன இளம்பெண் உத்தரபிரதேச  மாநிலம் மீரட் நகரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது இருப்பிடம் பற்றித் தெரிந்துகொண்டு அந்தப் பகுதிக்குச் சென்ற போலீஸார்  இளம்பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.

ஆனால், அப்பெண்ணை கடத்திய நபர் தப்பியோடிவிட்டதாகவும் அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர், அதில், மைத்துனியான ,அப்பெண்ணை டெல்லியில் இருந்து அவரது  உறவினரே அவரை காரில் கடத்திச் சென்று, கடந்த 16 நாட்கள் அறையில் அடைத்துவைத்து   பாலியல் வன்கொடுமை செய்ததாகக் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.