ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 மே 2023 (18:14 IST)

உயிர்த் தோழனுடன் உடன் கட்டை ஏறிய நண்பன்

Fire
உத்தரப்பிரதேச மாநிலம் பெரோஷாபாத் மாவட்டத்தில்  நண்பர் ஒருவர் உயிர்த் தோழனுடன் உடன் கட்டை ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பெரோஷாபாத் மாவட்டத்தில் உள்ள மதிய நாடியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார்( 40) இவரது  நண்பர் கவுரவ் சிங்( 42). இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். 

இவர்கள் இருவரும் திருமண நிகழ்ச்சிகளில் டிரம்ஸ் அடித்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அசோக் புற்று  நோயால் பாதிக்கப்பட்டார். இதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவு குறித்து தகவல் அறிந்து ஊருக்கு வந்த கவுரவ் தன் நண்பரின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதார். அதன்பின்னர், அசோக்குமாரின் உடல் எரியூட்டுவதற்குக் கொண்டு செல்லப்பட்டது.

தன் நண்பரின் எரிந்து கொண்டிருக்குப்பதை  நின்று பார்த்துக் கொண்டிருந்த கவுரவ். திடீரென்று தன் நண்பரின் எரிந்து கொண்டிருக்கும் சிதையின் மீது குதித்துவிட்டார்.

அருகில் இருந்தோர் அவரை மீட்டனர், 90 சதவீதம் காயமடைந்த கவுரவ்வை மருத்துமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் பாதிவழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.