வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (20:22 IST)

திருமணத்திற்கு வராமல் ஓட முயன்ற மணமகன்...20 கிமீ தூரம் துரத்திப் பிடித்த மணமகள் !

உத்தரபிரதேச மாநிலத்தில் திருமணம் நடைபெற இருந்த சில மணி நேரத்தில் மணமகன் மண்டத்திற்கு வராமல் ஓட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள பதான் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு இளம்பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் இரு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இருவீட்டாரின் கலந்துபேசி ஞாயிற்றுக்கிழமை அன்று பூதேஸ்வர நாத் கோயிலில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இந்த நிலையில், திருமண தினத்தன்று மணமகன் வெகு நேரமாகியும் மேடைக்கு வரவில்லை. மணப்பெண் திருமணத்திற்குக் காத்திருக்கும்போது, போனில் நீண்ட நேரல் எதோ காரணம் சொல்லி வந்துள்ளார்.

பின்னர், மணமகள் பேருந்து நிலையத்திற்குச் சென்று,  மணமகனை பரேலியில் இருந்து சுமார் 20 கிமீ தூரம் வரை துரத்திச் சென்று, பீமோரா காவல் நிலையம் அருகேயுள்ள பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் போது அவரைக் கண்டுபிடித்து, மீண்டும் அவரை மண்படத்திற்கு கூட்டி சென்றார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,