வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 மே 2023 (19:58 IST)

பாகிஸ்தானை இந்து நாடாக மாற்றிவிடுவேன்- சாமியர் பேச்சால் சர்ச்சை

theerendira sasthiri
இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானையும் இந்து நாடாக மாற்றிவிடுவேன் என்று சாமியார் ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தமி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள பாகேஷ்வர் தாம் என்ற கோவிலின் தலைவராக இருப்பவர் தீரேந்திர சாஸ்திரி.

இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்று பலமுறை பேசியிருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில், தி கேரளா ஸ்டோரி என்ற படத்திற்கு தன் ஆதரவை வெளிப்படுத்தினார். 

இந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், குஜராத்  மக்கள் எப்போது திரண்டு வருகிறார்களோ, அப்போது இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான் நாட்டையும் இந்து நாடாக மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

இவர் பங்கேற்கும் கூட்டத்திற்கு மக்கள் அதிகளவில் வருவதால், இவருக்கு மத்திய பிரதேச அரசு ஒய் பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.