அதிமுக கூட்டணியில் தவெக சேர வேண்டுமானால் ஒரே ஒரு நிபந்தனை தான்: ஆர்வி உதயகுமார்
அ.தி.மு.க. கூட்டணிகளில் 'தமிழக வெற்றிக் கழகம்' இணையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொள்பவர்கள், அ.தி.மு.க-வின் தலைமையை ஏற்று கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கூட்டணிகளில் சேர்த்து கொள்வோம் என்று தெரிவித்தார்.
தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்கள், அ.தி.மு.க. தலைமை ஏற்று கொள்பவர்களுடன் மட்டும்தான் கூட்டணி என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
எனவே, இதிலிருந்து 'தமிழக வெற்றிக் கழகம்' அ.தி.மு.க. கூட்டணிக்கு வர வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
சமீபத்தில் தான், 'தமிழக வெற்றிக் கழகத்தின்' தலைமையில், விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என்றும், கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் ஏற்றப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran